'அது இல்லாமல் வெளியில் வர மாட்டேன்' - ராஷா ததானி
அபிஷேக் கபூர் இயக்கும் 'ஆசாத்' படத்தின் மூலம் ராஷா ததானி பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை ரவீனா தாண்டன். 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கே.ஜி.எப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் இவர் 'சாது', 'ஆளவந்தான்' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரது மகள் ராஷா ததானி.
இவர் தற்போது அபிஷேக் கபூர் இயக்கும் 'ஆசாத்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில், புகைப்படக் கலைஞர்களுடன் (பாப்பராசி) தனது முதல் சந்திப்பு பற்றி ராஷா ததானி பேசினார். அவர் கூறுகையில்,
"நான் என் தலைமுடியை வாஸ் செய்ய சலூனுக்குச் சென்றிருந்தேன். எங்கள் காரில் உள்ள எண்கள் ஒரே மாதிரி இருப்பதால் அவர்கள் என்னை என் அம்மா( ரவீனா தாண்டன்) என்று தவறாகப் புரிந்து கொண்டு புகைப்படம் எடுத்துவிட்டனர். இதனால் அவர்களை பார்த்து நான் மிகவும் பயந்தேன். ஆனால், இப்போது அவர்களை பார்த்து பயம் இல்லை. அதற்கெல்லாம் தயாராக இருக்கிறேன்.
அதனால் நான் வெளியில் சென்றால் லிப்ஸ்டிக், கண் மை இல்லாமல் செல்லமாட்டேன். மேக்கப் போடவில்லை என்றால் சன் கிளாஸ் அணிந்துகொள்வேன்' என்றார்.