'அவர் ரசிகர்களுக்காக உழைக்கிறார்' - பிரபல நடிகரை பாராட்டிய அர்ஜுன் கபூர்


He works hard for his fans - Arjun Kapoor praises salman khan
x

அர்ஜுன் கபூரும், நடிகை மலைகா அரோராவும் பல வருடங்களாகவே காதலித்து வந்தநிலையில் சமீபத்தில் பிரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார். இவரது மகள் ஜான்வி கபூர், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். போனிகபூரின் மகன் அர்ஜுன் கபூரும் நடிகராக இருக்கிறார். அர்ஜுன் கபூரும், நடிகை மலைகா அரோராவும் பல வருடங்களாகவே காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் பிரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய அர்ஜுன் கபூர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை பாராட்டினார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'சல்மான் கான், சினிமாவை ஒரு நடிகரின் பார்வையில் பார்த்ததில்லை. அவர் எப்போதும் அதை ரசிகரின் பார்வையில் பார்ப்பார். மக்களுக்காக செயல்பட்டு, ரசிகர்களுக்காக உழைக்கிறார்' என்றார்.

சல்மான் கான் தற்போது சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. மேலும் சல்மான் கான், அட்லீ இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.


Next Story