'சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம்' - சாந்தினி


He is the reason I have been in cinema for so many years - chandini tamilarasan
x

விவேக் பிரசன்னா நாயகனாக நடித்துள்ள படம் 'டிராமா' .

சென்னை,

விவேக் பிரசன்னா நாயகனாக நடித்துள்ள படம் 'டிராமா' . அஜித் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆர் எஸ் ராஜ்பரத் இசையமைக்கிறார்.

தம்பிதுரை மாரியப்பன் இயக்கும் இந்த படத்தை டர்ம் புரொடக்சன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிக்கிறார். விவேக் பிரசன்னாவுடன் பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார்கள். மெடிக்கல் கிரைம் திரில்லர் ஜார்னரில் தயாராகி உள்ள இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை சாந்தினி தமிழரசன் பேசுகையில், 'என்னை திரையுலகில் அறிமுகம் செய்த பாக்யராஜ் இங்கு வந்திருக்கிறார். நான் இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று வரை நான் அவர் சொல்லிக் கொடுத்த பயனுள்ள குறிப்புகளை பயன்படுத்திதான் நடித்து வருகிறேன்' என்றார்.


Next Story