இந்த மாத இறுதியில் வெளியாகும் 'குட் பேட் அக்லி' படத்தின் அப்டேட்

இந்த மாத இறுதியில் 'குட் பேட் அக்லி' படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக பட விநியோகிஸ்தரான ராகுல் அறிவித்துள்ளார்.
சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் சுமார் ரூ.270 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
இந்தநிலையில் படத்தின் அப்டேட்டை இந்த மாத இறுதியில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பட விநியோகிஸ்தரான ராகுல் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் " கொஞ்சம் நாள் பொரு தலைவா , குட் நியூஸ் ஆன் தி வே மாமே" என பதிவிட்டுள்ளார். இந்த தகவல் அறிந்த அஜித்தின் ரசிகர்களும் இப்பொழுதே கொண்டாட தயாராகி விட்டார்கள்.