'கேம் சேஞ்சர்': 4-வது பாடலுக்கான புரொமோ வெளியானது


Game Changer: Promo for 4th song released
x
தினத்தந்தி 20 Dec 2024 6:49 AM IST (Updated: 20 Dec 2024 6:53 AM IST)
t-max-icont-min-icon

'கேம் சேஞ்சர்' படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தியன் - 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சமீபத்தில், இதன் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி வைரலானநிலையில், இத்திரைப்படத்தின் 4-வது பாடலான 'தூப்' பாடலின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதனுடன், வரும் 22-ம் தேதி இப்பாடல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story