பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்


பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்
x

நடிகர் ரஜினிகாந்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சென்னை,

பண்டிகை தினங்களில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெறுவதை அவரது ரசிகர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்காக சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள இடத்திற்கு ஏராளமான ரசிகர்கள் வருகை தருகின்றனர்.

அந்த வகையில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரஜினிகாந்த் ரசிகர்கள் இன்று ரஜினிகாந்த் வீட்டின் முன்பு திரண்டனர். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தற்போது வீட்டில் இல்லை என்றும், படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Next Story