இளையராஜா பயோபிக் படத்தில் இணைந்த பிரபல நிறுவனம்


இளையராஜா பயோபிக் படத்தில் இணைந்த பிரபல நிறுவனம்
x

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

சென்னை,

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க அதற்கான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினர். அதில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை 'கேப்டன் மில்லர்' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். இதனால் இளையராஜா பயோபிக் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்திற்கு இளையராஜாவின் இசையையே பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் ஒரு சில காரணத்தால் படப்பிடிப்பை தொடங்கமால் தாமதப்படுத்தி வந்தனர். இதனால் படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், கனெக்ட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் தற்போது இட்லி கடை, குபேரா, தேரே இஷ்க் மெயின் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவற்றின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னரே இளையராஜா பயோபிக் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.



Next Story