இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'மாரீசன்' திரைப்படம்


இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மாரீசன் திரைப்படம்
x
தினத்தந்தி 7 Dec 2024 9:12 PM IST (Updated: 7 Dec 2024 9:14 PM IST)
t-max-icont-min-icon

வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தனது காமெடியால் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் வடிவேலு. பின்பு ஹிரோவாகவும் நடித்து தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் 'வைகைப்புயல்' என்று அழைக்கப்படுகிறார். அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்த.சியுடன் நடிப்பதாக கேங்கர்ஸ் பட அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது.

'மாமன்னன்' படத்துக்குப் பிறகு பகத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'மாரீசன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'ஆறு மனமே' படத்தை இயக்கியிருந்தார். 2014-ம் ஆண்டு திலீப் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'வில்லாலி வீரன்' படத்தை இயக்கியிருந்தார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்துக்குப் பிறகு வடிவேலுவும், பகத் பாசிலும் இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நாகர்கோவில் பகுதியில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் பகத் பாசில் பிசியாக இருந்ததால் தற்போதுதான் அவருடைய கால்ஷீட் கிடைத்துள்ளதாகவும் தற்போது அவருடைய காட்சிகளை வேகமாக படமாக்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இன்னும் சில நாட்களில் மாரீசன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story