மனைவியின் பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாவில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட இயக்குநர் அட்லீ
இயக்குநரான அட்லீ தனது மனைவி பிரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகில் இருந்து இன்று ஆங்கில திரையுலகம் வரை சென்று கொண்டிருக்கும் முன்னணி இயக்குநர் அட்லீ. ஷங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் படங்களை இயக்கி வருகிறார். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே வெற்றி பெற்றார். தனது இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். 2016-ம் ஆண்டு வெளியான தெறி படம் ஹிட் படமாக அமைந்தது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே மெர்சல் திரைப்படத்தை இயக்கினார் அட்லீ. இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிகில் படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படம் சுமார் ரூ.1,200 கோடி வசூல் செய்தது.
நடிகர் விஜய், அட்லீ கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. நடிகை பிரியாவை காதலித்து வந்த அட்லீ கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் அவரும், அவரது மனைவி பிரியாவும் கவனம் செலுத்தி வருகின்றனர். பிரியா அட்லீ இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மனைவி பிரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அட்லி தனது இன்ஸ்டா பதிவில் 'பாப்பா பிரியா அட்லீக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீ எனது மகள், எனது அன்பு, எல்லாமே நீதான். எல்லாமே இருந்தாலும் நீ இல்லாவிட்டால் அது முழுமை பெறாது. நீதான் எனது பலம், வெற்றி, கௌரவம், அன்பு எல்லாமே. உன்னுடைய பாய்ஸ்களிடம் (நான், மீர், பெக்கி, சோக்கி, காபி) இருந்து உனக்கு மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துகள். நீதான் எங்களது உலகம். உன்னை பெருமித படுத்துவோம்' எனக் கூறியுள்ளார்.