'ரைஸ் ஆப் டிராகன்' பாடலில் கவுதம் மேனன் நடனமாடியதை பற்றி பேசிய டிராகன் பட இயக்குனர்


Director Ashwath Marimuthu talks about Gautham Menons dance in the song Rise of Dragon
x

டிராகன் படத்தின் முதல் பாடலான 'ரைஸ் ஆப் டிராகன்' லிரிக் வீடியோ நேற்று வெளியானது

சென்னை,

பிரதீப் ரங்கனாதன் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிகுமார், ஜார்ஜ் மரியன், இந்துமதி, விஜே சித்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தசூழலில் இந்த படத்தின் முதல் பாடலான 'ரைஸ் ஆப் டிராகன்' லிரிக் வீடியோ நேற்று வெளியானது. இப்பாடலில் பிரதீப் ரங்கனாதனுடன் இணைந்து கவுதம் வாசுதேவ் மேனனும் நடனமாடியிருந்தார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியசத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், 'ரைஸ் ஆப் டிராகன்' பாடலில் கவுதம் மேனன் நடனமாடியதை பற்றி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"கவுதம் மேனனை நடனமாட வைத்தது உங்களுக்கு மட்டுமல்ல, அவருக்கே அது சர்பிரைஸ்தான். படப்பிடிப்புக்கு வந்தபிறகுதான் அவரிடம் கூறினேன். நான் நினைத்ததைப்போல அவரும் மறுக்கவில்லை" என்றார்.


Next Story