'தில்ருபாவில் மக்கள் என்னுடைய மறு பக்கத்தைப் பார்ப்பார்கள்' - கிரண்

இப்படத்தில் ருக்சார் தில்லான் மற்றும் கேத்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கிரண் அப்பாவரம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'ராஜா வாரு ராணி காரு' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இப்படத்தையடுத்து, இவர் 'தில்ருபா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ருக்சார் தில்லான் மற்றும் கேத்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தை புதுமுக இயக்குனர் விஸ்வா கருண் இயக்கி இருக்கிறார். மேலும், ரவி, ஜோஜோ ஜோஸ், ராகேஷ் ரெட்டி மற்றும் சரேகாமா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படம் இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புரமோசனின்போது, கிரண் அப்பாவரம் பேசுகையில்,
"கா" வெற்றிக்குப் பிறகு, மக்கள் என்னிடம் இருந்து என்ன மாதிரியான படத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்துள்ளேன். தில்ருபா படம் எந்தப் பெண்ணையும் சங்கடப்படுத்தாது. தில்ருபாவில் மக்கள் என்னுடைய வேறு பக்கத்தைப் பார்ப்பார்கள்," என்றார்.