நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாகு மகாராஜ்' படத்தின் டிரெய்லர் வெளியானது


Daaku Maharaaj trailer out now
x

'டாகு மகாராஜ்' படத்தை பாபி கொல்லி இயக்குகிறார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தற்பொழுது தனது 109-வது படத்தில் நடிக்கிறார்.

'டாகு மகாராஜ்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்குகிறார். எஸ் தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இதில், பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் வரும் 12-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், தற்போது இதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.


Next Story