சாட்டையால் அடித்துக் கொண்ட கூல் சுரேஷ்...வீடியோவை பார்த்து சிரித்த சமுத்திரக்கனி


சாட்டையால் அடித்துக் கொண்ட கூல் சுரேஷ்...வீடியோவை பார்த்து சிரித்த சமுத்திரக்கனி
x

நடிகர் கூல் சுரேஷ் 'திரு.மாணிக்கம்' படத்தின் புரமோஷனுக்கான தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கு தானே சாட்டையால் அடித்து நேற்று நூதன போராட்டம் நடத்தினார். அண்ணாமலை நடத்திய இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போலவே, நடிகர் கூல் சுரேஷ் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு சமுத்திரக்கனி நடித்துள்ள 'திரு.மாணிக்கம்' படத்திற்கு புரமோஷன் செய்துள்ளார். படத்தின் பெயர்(திரு.மாணிக்கம்) மற்றும் படக்குழுவினரின் பெயர்களை சொல்லி கொண்டே, தனக்கு தானே சரமாரியாக சாட்டையால் அடித்து கொண்டார்.

இந்த வீடியோவை தனது செல்போனில் பார்த்த நடிகர் சமுத்திரக்கனி குலுங்கி குலுங்கி சிரித்தார். அப்போது சமுத்திரக்கனியுடன் இயக்குனர் நந்தா பெரியசாமி உடனிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story