கிறிஸ்டோபர் நோலனின் 13-வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்


Christopher Nolans 13th film
x
தினத்தந்தி 24 Dec 2024 10:39 AM IST (Updated: 24 Dec 2024 10:55 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்டோபர் நோலனின் 13-வது படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

பிரபல ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'ஓப்பன் ஹெய்மர்'. ஓப்பன் ஹெய்மர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்பி நடித்த இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இதனையடுத்து, கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில், மேட் டாமன், ஸ்பைடர் மேன்' பட நடிகர் டாம் ஹாலண்ட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில், இப்படத்தில், அன்னே ஹாத்வே, ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரோன் ஆகியோர் இணைந்தனர். அன்னா ஹாத்வே இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'இன்டர்ஸ்டெல்லர்' படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் கதை பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, கிறிஸ்டோபர் நோலனின் 13-வது படத்திற்கு 'தி ஒடிஸி' எனப்பெயரிடப்பட்டுள்ளதாகவும், கவிஞர் ஹோமரின் காவிய கவிதையை தழுவி இப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story