2024-ம் ஆண்டின் மிகப்பெரிய பாலிவுட் தோல்வி படம் - யுத்ரா, மைதான் இல்லை
இரண்டாவது இடத்தில் அஜய் தேவ்கனின் மைதான் உள்ளது.
மும்பை,
அக்சய் குமார், டைகர் ஷெராப் மற்றும் மானுஷி சில்லர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் படே மியான் சோட் மியான். ஆக்சன்-திரில்லர் பாணியில் உருவான இப்படத்தை அலி அப்பாஸ் ஜாபர் எழுதி இயக்கினார்.
இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த இப்படம் வெறும் ரூ.66 கோடி மட்டுமே வசூலித்தது. ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதன் மூலம் ரூ. 250 கோடிக்கும் மேல் இழப்பை சந்தித்தது.
இப்படம்தான் 2024-ம் ஆண்டில் மிகப்பெரிய தோல்வியடைந்த பாலிவுட் படங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இப்படத்திற்கு அடுத்த படியாக அஜய் தேவ்கனின் மைதான் உள்ளது. ரூ. 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் வெறும் ரூ. 70 கோடி மட்டுமே வசூலித்தது.
இப்படங்களை தொடர்ந்து, ஆரோன் மெய்ன் கஹான் தம் தா, யுத்ரா, ஐ வாண்ட் டு டாக் உள்ளிட்ட படங்கள் உள்ளன.