தமிழில் அறிமுகமாகும் பாசில் ஜோசப் ?


Basil Joseph to make his Tamil debut?
x

'பராசக்தி' படத்தில் பாசில் ஜோசப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொலும்பு,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் 'பராசக்தி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

கடந்த சில நாட்களாக மதுரையில் நடந்துவந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது பராசக்தி படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பாசில் ஜோசப் இப்படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படமாக இது இருக்கும்.


Next Story