பிரபல இயக்குனர் சூரஜின் அடுத்த படத்தில் ஆயுஷ்மான் குரானா ?
ஆயுஷ்மான் குரானா, ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாக 'தமா' என்ற ஹாரர் படத்தில் நடிக்க உள்ளார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா. 'விக்கி டோனர்' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஆயுஷ்மான் குரானா, 'ஷுப் மங்கள் சாவ்தான்' ,'ஷுப் மங்கள் ஸ்யாதா சாவ்தான்', 'பாலா' எனத் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார்.
இவர் தற்போது தமா என்ற ஹாரர் திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்நிலையில், குடும்ப படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் சூரஜ் பர்ஜாத்யாவின் அடுத்த படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவலின்படி, ஆயுஷ்மான் குரானாவுக்கு சூரஜின் கதை மிகவும் பிடித்திருப்பதாகவும் விரைவில் அவருடன் இணைவதில் ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இப்படத்தில் நடிக்க சல்மான் கான், ஷாஹித் கபூர் மற்றும் சோனு சூட் ஆகியோரை சூரஜ் பரிசீலித்ததாக கூறப்படும்நிலையில், ஆயுஷ்மான் குரானா சரியாக இருப்பார் என்று கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
இப்படத்தின் கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் இன்னும் இறுதி செய்யப்படாதநிலையில், படப்பிடிப்பு 2025 மே மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.