சிம்புவின் "எஸ்டிஆர் 51" படப்பிடிப்பு குறித்து அஸ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட்!

சிம்பு நடிக்கும் ‘காட் ஆப் லவ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள "தக் லைப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 3 புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. அந்த வகையில், அடுத்ததாக சிம்பு 'பார்க்கிங்' திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 49' படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 50' திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.
அதனைதொடர்ந்து, 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை இயக்கி உள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகாக 'எஸ்டிஆர் 51' என பெயரிடப்பட்டிருந்த நிலையில், படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம் கோடை விடுமுறையின்போது வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், " 'எஸ்டிஆர் 51' திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும். 2026ல் வெளியாகும்" என்று அப்டேட் கொடுத்துள்ளார். மேலும், "சிம்பு என்னுடைய படத்தில் நடிப்பதை விட அவரை நான் நிறைய படங்களில் பார்க்க விரும்புகிறேன். 'எஸ்டிஆர் 51' ஸ்கிரிப்ட் பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் மட்டும் இருக்கிறது. இந்த படம் ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களில் உங்களுக்கு என்ன பிடித்ததோ அது இருக்கும். சிம்புவிடம் நீங்கள் எதையெல்லாம் ரசித்தீர்களோ அதுவும் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.