விஜயசாந்தி - நந்தமுரி கல்யாண் ராம் படத்தின் டீசர் வெளியீடு


Arjun S/o Vyjayanthi teaser: Emotional tale of a mother & son
x

இப்படத்தில் கதாநாயகியாக சாய் மஞ்சரேக்கர் நடிக்கிறார்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி கல்யாண் ராம். இவர் பிரபல நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகன் ஆவார். நந்தமுரி கல்யாண் ராம் நடித்த அதானொக்கடே, ஹரே ராம், 118 போன்ற அதிரடித் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது இவர் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அர்ஜுன் s/o வைஜெயந்தி என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் பிரதீப் சிலுக்குரி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக சாய் மஞ்சரேக்கர் நடிக்கிறார்.

மேலும், நடிகை விஜயசாந்தி, நடிகர்கள் சோஹல் கான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story