ஆஷிகி 3-ல் இருந்து திரிப்தி டிம்ரி விலகினாரா? - பதிலளித்த இயக்குனர்


Anurag Basu denies Triptii Dimris Aashiqui 3 exit over bold scenes
x
தினத்தந்தி 13 Jan 2025 4:29 PM IST (Updated: 13 Jan 2025 4:32 PM IST)
t-max-icont-min-icon

ஆஷிகி 3 படத்தில் திரிப்தி டிம்ரி கதாநாயகியாக அறிவிக்கப்பட்டார்.

சென்னை,

டி-சீரிஸின் பூஷன் குமார், நடிகர் கார்த்திக் ஆர்யனை வைத்து ஆஷிகி 3 படத்தை இயக்குவதாக சமீபத்தில் அறிவித்தார். இதில் திரிப்தி டிம்ரி கதாநாயகியாக அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும், சில காரணத்தால் திரிப்தி டிம்ரி இப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. அதன்படி, இப்படத்தில் திரிப்தி டிம்ரி நடிக்க உள்ள கதாபாத்திரம் அனிமல் படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு முற்றிலும் தலைகீழானது என்பதால் அவர் இப்படத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று கருதி அவர் வெளியேற்றப்பட்டதாக வதந்திகள் பரவின.

இதனால், தயாரிப்பாளர்கள் புது கதாநாயகியை தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பூஷன் குமார் இதற்கு பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அது உண்மை இல்லை' என்றார்.


Next Story