ரஜினிகாந்துக்கு அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து
75-வது பிறந்தநாளை கொண்டாடும் நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவருக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
"நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று 75-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story