'கால் மீ பே' மற்றும் 'சிடிஆர்எல்'-ல் நடிக்கும்போது...- மனம் திறந்த அனன்யா பாண்டே


கால் மீ பே மற்றும் சிடிஆர்எல்-ல் நடிக்கும்போது...- மனம் திறந்த அனன்யா பாண்டே
x

'கால் மீ பே' மற்றும் 'சிடிஆர்எல்'-ல் நடிக்கும்போது மிகவும் பதற்றமாக இருந்ததாக அனன்யா பாண்டே கூறினார்.

மும்பை,

ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அனன்யா பாண்டே. அதன் பிறகு பதி பத்னி அவுர் வா போன்ற படங்களில் நடித்தார். மேலும், நடிகை அனன்யா பாண்டே 'காலி பீலி', 'கெஹ்ரையான்', 'லைகர், டிரீம் கேர்ள்-2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு தனது முதல் வெப் தொடரான 'கால் மீ பே'வில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, 'சிடிஆர்எல்' என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டிலுமே இவரின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இந்நிலையில், 'கால் மீ பே' மற்றும் 'சிடிஆர்எல்'-ல் நடிக்கும்போது மிகவும் பதற்றமாக இருந்ததாக அனன்யா பாண்டே மனம் திறந்து பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

'கால் மீ பே' மற்றும் 'சிடிஆர்எல்'-ல் நடிக்கும்போது மிகவும் பதற்றமாக இருந்தது. இதில் என்னை 'மக்கள் விரும்புவார்களா?, விரும்பமாட்டார்களா? என்னைப் பார்த்து சலித்துக் கொள்வார்களா? என்றெல்லாம் பயந்தேன். ஆனால், 'கால் மீ பே' மற்றும் 'சிடிஆர்எல்' ஆகிய இரண்டிற்காகவுமே எனக்கு பாராட்டுகள் கிடைத்தன' என்றார்.


Next Story