அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர்?


Allu Arjun-Atlee film: This Tamil hero’s name pops up for the second lead role
x

இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் மற்றொரு நடிகர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

சென்னை,

தமிழ் திரையுலகில் இருந்து இன்று பாலிவுட் திரையுலகம் வரை சென்றுள்ள முன்னணி இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் விஜய்யை வைத்து "தெறி, மெர்சல், பிகில்" ஆகிய ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானார்.

பின்னர் பாலிவுட்டில் கலமிறங்கிய அட்லீ, ஷாருக்கானை வைத்து இயக்கிய 'ஜவான்' படம் ரூ. 1,200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது அட்லீ, அல்லு அர்ஜுனை இயக்க உள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் மற்றொரு நடிகர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டநிலையில், அது தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் என்று கூறப்படுகிறது. மேலும், ஹீரோயினாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.


Next Story