'விடாமுயற்சி படம் பார்த்துவிட்டு அஜித் சொன்னது..' -இயக்குனர் மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்


Ajith said this after watching the film Vidhamuyalshi.. - Information shared by director Magizh Thirumeni
x
தினத்தந்தி 1 Jan 2025 10:33 AM IST (Updated: 1 Jan 2025 1:43 PM IST)
t-max-icont-min-icon

விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போவதாக தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்தது

சென்னை,

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், திரிஷா நடித்துள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தில் இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி மற்றும் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்திற்கான டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தசூழலில், விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போவதாக தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்தது. இது, அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தை பார்த்த பின் அஜித் சொன்ன விஷயங்களை இயக்குனர் மகிழ் திருமேனி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"விடாமுயற்சி படத்தை அஜித் சார் பார்த்துவிட்டு 'இதுபோன்ற படங்களில்தான் நடிக்க விரும்புகிறேன்' எனக் கூறினார். வழக்கமான மாஸ் பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லாமல், வலுவான கதைக்களம் கொண்டதாக 'விடாமுயற்சி' படம் இருக்கும்'என்றார்


Next Story