வழக்கத்தையே மாற்றிய அஜித்...ரெஜினா சொன்ன நெகிழ்ச்சி தகவல்

ரெஜினா தற்போது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சென்னை,
தமிழில் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடித்து பிரபலமான ரெஜினா கசான்ட்ரா, தொடர்ந்து 'மாநகரம்', `சரவணன் இருக்க பயமேன்', `சிலுக்குவார் பட்டி சிங்கம்', `மிஸ்டர் சந்திரமவுலி' என்று பல முக்கிய படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது இவர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 6-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், அஜித் தனது வழக்கத்தையே மாற்றியதாக ரெஜினா கூயுள்ளார். அதன்படி, விடாமுயற்சி படப்பிடிப்பின்போது அஜித் பரிசளித்த புகைப்படம் மட்டுதான் தனது வீட்டில் வைத்திருக்கும் ஒரே பிரேம் செய்யப்பட்ட புகைப்படம் என்று நடிகை ரெஜினா நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
மேலும், படப்பிடிப்பு துவங்கியபோது நடிகர் அஜித் தானே கேமிராவில் அங்கிருந்தவர்களை புகைப்படம் எடுத்து அதை பிரேம் செய்துகொடுத்ததாகவும் அது தன்னை மிகவும் நெகிச்சியடைய வைத்ததாகவும் ரெஜினா கூறினார். தனது வீட்டில் புகைப்படங்களை பிரேம் செய்து வைக்கும் வழக்கம் தன்னிடம் இல்லாதபோதும் அஜித் கொடுத்த புகைப்படத்தை மட்டும் தான் பத்திரமாக வைத்திருப்பதாக நினைவுகளை பகிர்ந்தார்.