மதுரை வந்த நடிகர் விக்ரம்.. செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்


Actor Vikram arrived in Madurai.. Fans enjoyed taking selfies
x

விக்ரம் தற்போது அருண்குமார் இயக்கத்தில் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

மதுரை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். சமீபத்தில் இவரது நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'தங்கலான்' படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து, இவர் தற்போது பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, 'மண்டேலா', 'மாவீரன்' போன்ற படங்களை இயக்கிய 'மடோன் அஸ்வின்' இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இந்நிலையில், நடிகர் விக்ரம் இன்று மதுரை வந்துள்ளார். அப்போது அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story