'பார்க்கிங்' பட இயக்குனருடன் இணையும் நடிகர் சிம்பு!


பார்க்கிங் பட இயக்குனருடன் இணையும் நடிகர் சிம்பு!
x

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சென்னை,

நடிகர் சிம்புவிற்கு 'மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல' என 3 படங்களும் ஹாட்ரிக் ஹிட் அடித்தன. இதற்கிடையே, இயக்குனர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'தக் லைப்' படத்தில் சிம்பு இணைந்தார். படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில், தற்போது சிம்பு 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை இயக்கி உள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது சிம்புவின் 49-வது படமாகும். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படம் இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பற்றி பேசும் படமாக உருவாக உள்ளது.

இதற்கிடையில், 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிகர் சிம்புவிடமும் ஒரு வரி கதையை சொல்லி இருக்கிறாராம். எனவே நடிகர் சிம்பு, இந்த ஒரு வரி கதை தனக்கு பிடித்திருப்பதாகவும் விரைவில் முழு கதையை எழுதிக் கொண்டு வாருங்கள் என்று தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விக்ரமிடமும் கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story