திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் பலியான விவகாரம் - ரஜினிகாந்த் வருத்தம்
கூலி படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் செல்ல இன்று சென்னை விமானநிலையம் வந்தார் ரஜினிகாந்த்.
சென்னை,
திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மறுநாள் இரவு வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கூலி படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் செல்ல இன்று சென்னை விமானநிலையம் வந்தார் ரஜினிகாந்த். அப்போது, செய்தியாளர்கள் திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு, எப்போது? என்று கேட்ட ரஜினி பின்னர் 'ஓ மை ஹாட்' என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.
பின்னர், கூலி மற்றும் அடுத்த படம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக தற்போது செல்கிறேன். அடுத்த படம் இல்லை. கூலிக்கு பிறகுதான் எல்லாம்' என்றார்.
Related Tags :
Next Story