கீவ்,  உக்ரைன் போரில் கிழக்கு உக்ரைனில் டான்பாஸ்... ... லைவ் அப்டேட்ஸ்: போருக்கு மத்தியில் உக்ரைன் செல்வாரா, ஜோ பைடன்? அவரே வெளியிட்ட தகவல்
Daily Thanthi 2022-06-22 08:11:39.0
t-max-icont-min-icon

கீவ்,

உக்ரைன் போரில் கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் பகுதியில் தொடர்ந்து ரஷிய படைகள் தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு ஆபத்தான பகுதிகளில் இருந்து 21 ஆயிரத்து 662 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தப் போரில் தன்னார்வலராக கலந்து கொண்டு சண்டையிட்டு வந்த அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் ஜபீல்ஸ்கி என்பவர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைனுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் அவ்வாறு உக்ரைன் செல்லக்கூடும் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால், "நான் உக்ரைன் செல்ல வாய்ப்பு இல்லை. நான் உக்ரைனியர்களுக்கு மேலும் கஷ்டம் கொடுக்க விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் உக்ரைன் வர வேண்டும் என்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story