இலங்கை அதிபர் தேர்தல்: இரண்டாம் சுற்று வாக்கு... ... இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு
x
Daily Thanthi 2024-09-22 08:30:21.0
t-max-icont-min-icon

இலங்கை அதிபர் தேர்தல்: இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரம் அதிரடியாக மாறி உள்ளது. இதன்படி இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமரா திசநாயகேவின் வாக்கு சதவீதம் 50 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக சரிந்தது.

இரண்டாவது இடத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன்படி இலங்கை அதிபர் தேர்தலில் இதுவரை எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை உறுதியாகி உள்ளது. இதன்படி தேர்தலில் அனுரா குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி உருவாகி உள்ளது. இந்த சூழலில் தற்போது இரண்டாவது விருப்ப வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகி உள்ளது.

முன்னதாக இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போதைய நிலவரம்:-

அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) - 27,07,105 வாக்குகள் ( 39.52 சதவீதம்)

சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) - 23,48,052 வாக்குகள் ( 34.28 சதவீதம்)

ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) - 11,92,649 வாக்குகள் (17.41 சதவீதம்)

அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) - 2,10,622 வாக்குகள் ( 3.07 சதவீதம்)

நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) - 1,62,733 வாக்குகள் ( 2.38 சதவீதம்)


Next Story