இலங்கை அதிபர் தேர்தல்: 50 சதவீத வாக்குகளைப் பெறுவதில் கடும் போட்டி - தற்போதைய நிலவரம்
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரம் அதிரடியாக மாறி வருகிறது. இதன்படி இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமரா திசநாயகேவின் வாக்கு சதவீதம் 50 சதவீதத்தில் இருந்து தற்போது 39 சதவீதமாக சரிந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலையே நீடித்தால் முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
இந்த தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றால் மட்டுமே ஒருவரால் இலங்கை அதிபராக முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் கடும்போட்டி நிலவுகிறது.
இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன்படி நமல் ராஜபக்சே 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
முன்னணி நிலவரம்:-
அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) - 24,59,993 வாக்குகள் ( 39.44 சதவீதம்)
சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) - 21,24,298 வாக்குகள் ( 34.06 சதவீதம்)
ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) - 10,94,426 வாக்குகள் (17.55 சதவீதம்)
அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) - 2,10,379 வாக்குகள் ( 3.37 சதவீதம்)
நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) - 1,42,589 வாக்குகள் ( 2.29 சதவீதம்)
திலகர் (தமிழ் வேட்பாளர்) - 1,075 வாக்குகள் ( 0.02 சதவீதம்)