காசாவில் தண்ணீர் மூலம் பரவும் நோய் அதிகரிக்க... ... லைவ்: 11ம் நாளாக தொடரும் போர் - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி
x
Daily Thanthi 2023-10-17 07:49:10.0
t-max-icont-min-icon

காசாவில் தண்ணீர் மூலம் பரவும் நோய் அதிகரிக்க வாய்ப்பு - ஐ.நா. கவலை

காசாவிற்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் இணைப்பை இஸ்ரேல் துண்டித்தது. இதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக காசாவின் தெற்கு பகுதிக்கான குடிநீர் இணைப்பை இஸ்ரேல் தற்காலிகமாக திறந்து விட்டது.

ஆனாலும், காசாவில் கடுமையான குடுநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், காசாவில் கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், காசாவில் தண்ணீர் மூலம் பரவும் நோய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.


Next Story