இஸ்ரேலில் நடந்த தாக்குதல்கள் உலகையே... ... லைவ்: 11ம் நாளாக தொடரும் போர் - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி
x
Daily Thanthi 2023-10-17 00:36:21.0
t-max-icont-min-icon

இஸ்ரேலில் நடந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

இஸ்ரேலுடனான தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், “கடந்த வார இறுதியில் இஸ்ரேலில் நடந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், கிட்டத்தட்ட 200 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். முதியவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகள் கொல்லப்பட்டனர், சிதைக்கப்பட்டனர் மற்றும் உயிருடன் எரிக்கப்பட்டனர். இது ஒரு படுகொலை... நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம். இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இங்கிலாந்து குடிமக்களுக்கு நாங்கள் உதவுகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.


Next Story