காசாவில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேற்றம் ... ... லைவ்: 11ம் நாளாக தொடரும் போர் - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி
x
Daily Thanthi 2023-10-16 20:30:44.0
t-max-icont-min-icon

காசாவில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேற்றம்

இஸ்ரேலின் இந்த அறிவிப்பை தொடர்ந்து வடக்கு காசாவில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். காசாவின் மக்கள் தொகையில் பாதி அளவிலான அவர்கள் தெற்கை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இதில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் எங்கு செல்வது என தெரியாமல் ஐ.நா. அகதிகள் முகாம்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் போன்ற இடங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

அதேநேரம் காசா மக்களை வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தி உள்ள ஹமாஸ் அமைப்பினர், மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்காக சாலைகளில் தடுப்புகளை போட்டு இருக்கும் புகைப்படங்களை இஸ்ரேல் வெளியிட்டது.


Next Story