பிணைக்கைதிகளை மீட்பதற்காக தயார் நிலையில் இஸ்ரேல்... ... லைவ்: 11ம் நாளாக தொடரும் போர் - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி
x
Daily Thanthi 2023-10-16 20:23:32.0
t-max-icont-min-icon

பிணைக்கைதிகளை மீட்பதற்காக தயார் நிலையில் இஸ்ரேல் ராணுவம்

ஹமாஸ் அமைப்பின் தலைவர்களை கூண்டோடு அழிப்பதற்காகவும், இஸ்ரேலில் இருந்து பிடித்து செல்லப்பட்ட பிணைக்கைதிகளை மீட்பதற்காகவும் இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் நுழைய தயாராகி வருகிறது.

ஆயிரக்கணக்கில் காசா எல்லையில் குவிந்துள்ள இஸ்ரேல் வீரர்கள் தாக்குதலுக்கு ஒத்திகை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக விமானப்படையும் உள்ளது.

அதேநேரம் அமெரிக்காவின் போர்க்கப்பல்களும் இஸ்ரேல் ராணுவத்துக்கு துணையாக நிறுத்தப்பட்டு உள்ளன. வான், கடல், தரை என மும்முனை தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராக உள்ளது.

இஸ்ரேல் ராணுவம் நுழைவதை முன்னிட்டு காசாவின் வடக்கு பகுதியில் வாழும் மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டு இருந்தது. அவர்கள் தெற்கு காசாவுக்கு இடம்பெயர அறிவுறுத்தப்பட்டனர்.


Next Story