காசா மீது தொடர்ந்து இடைவிடாமல் குண்டுமழை பொழியும்... ... லைவ்: 11ம் நாளாக தொடரும் போர் - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி
x
Daily Thanthi 2023-10-16 19:05:04.0
t-max-icont-min-icon

காசா மீது தொடர்ந்து இடைவிடாமல் குண்டுமழை பொழியும் இஸ்ரேல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி நடத்திய திடீர் தாக்குதல், இரு தரப்புக்கும் இடையேயான முழுமையான போராக மாறியது. சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் இந்த போர் இன்று 11-வது நாளை எட்டியுள்ளது.

ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழிப்பது என்ற உறுதியுடன் போரில் குதித்து இருக்கும் இஸ்ரேல், போர் விமானங்கள் மூலம் காசா மீது தொடர்ந்து ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி வருகிறது. 24 மணி நேரமும் நீடிக்கும் இந்த குண்டு மழையில் சிக்கியுள்ள காசா நகரம், முற்றிலும் நிலைகுலைந்துள்ளது.


Next Story