2ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம் ... ... ஜம்மு-காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு
Daily Thanthi 2024-09-25 02:17:07.0

2ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

2ம் கட்ட தேர்தலில் 27 லட்சத்து 78 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதேவேளை, வாக்களிக்க 3 ஆயிரத்து 502 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 


Next Story