‘பொருளாதார தடைகளை நீக்குங்கள்’ - ரஷிய வெளியுறவு... ... #லைவ் அப்டேட்ஸ்:
Daily Thanthi 2022-05-26 00:22:08.0

‘பொருளாதார தடைகளை நீக்குங்கள்’ - ரஷிய வெளியுறவு துறை துணை மந்திரி

உலகளாவிய உணவு நெருக்கடியை தடுக்கிற வகையில், விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக, உக்ரைன் மீதான போரினால் விதிக்கப்பட்டுள்ள பொருளதார தடைகளை நீக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி உள்ளது.

உக்ரைன், உலகின் முன்னணி உணவு தானிய ஏற்றுமதி நாடாகும். ஏற்றுமதிக்கு உணவு தானியங்களை குவித்து வைத்து இருந்தாலும், துறைமுகங்களை உக்ரைன் படைகள் முற்றுகையிட்டிருப்பதால் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை.

இதையொட்டி ரஷிய வெளியுறவு துறை துணை மந்திரி ஆண்ட்ரே ரூடெங்கோ கூறுகையில், “உக்ரைனில் இருந்து கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதற்கு மனித நேய வழித்தடத்தை ஏற்படுத்தித்தர ரஷியா தயாராக இருக்கிறது. ஆனால் பொருளாதார தடைகளை அகற்ற வேண்டும். கீவ் அருகில் கண்ணிவெடிகளையும் அகற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.


Next Story