உக்ரைன் அதிபர் திட்டவட்டம்
சுவிஸ் நாட்டில் டாவோஸ் உலக பொருளாதார மன்றத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, காணொலிக் காட்சி வழியாக பேசினார். அப்போது அவர் கூறுகையில், “உக்ரைனில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை ரஷிய அதிபர் புதின் முழுமையாய் புரிந்து கொண்டிருக்கிறார் என்று நான் நம்பவில்லை” என்று தெரிவித்தார்.
“சமரச பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளதா?” என்று சி.என்.என். டெலிவிஷன் சார்பில் ஜெலன்ஸ்கியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “நாங்கள் எங்கள் மண்ணுக்காக, எங்கள் நாட்டில் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்தப் போர் எந்த நபருக்கும் எதிரானது அல்ல. இது எங்கள் நிலத்துக்கானது. எங்கள் சுதந்திரத்துக்கானது. எங்கள் எதிர்காலத்துக்கானது” என குறிப்பிட்டார்.