சென்னையில் வாக்கு எண்ணிக்கைசென்னை மாவட்டத்தில்... ... மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி
x
Daily Thanthi 2024-06-03 21:36:56.0

சென்னையில் வாக்கு எண்ணிக்கை

சென்னை மாவட்டத்தில் தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலும், வடசென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் மயிலாப்பூரில் உள்ள ராணிமேரி கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.

இதேபோல் திருவள்ளூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பெருமாள்பட்டு ஸ்ரீராம வித்தியா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பதிவான வாக்குகள் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியிலும், காஞ்சீபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு என்ஜினீயரிங் கல்லூரியிலும் நடைபெறுகிறது. .

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.


Next Story