தெற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
Daily Thanthi 2024-12-18 05:47:34.0
t-max-icont-min-icon

தெற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகர இருக்கிறது.

இந்த சூழலில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story