கோயம்பேடு - ஆவடி மெட்ரோ புதிய வழித்தடத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
x
Daily Thanthi 2025-01-13 05:08:22.0
t-max-icont-min-icon

கோயம்பேடு - ஆவடி மெட்ரோ புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டம்

சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்தில், கோயம்பேடு - ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் சீரமைப்பு நீளம் சுமார் 20 கி.மீ. ஆக அதிகரிக்கும். இதற்கு ரூ.6,500 கோடி வரை கட்டுமான செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும்கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஜனவரி இறுதிக்குள் தயாராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story