நாளை மகரவிளக்கு பூஜை: பந்தளத்தில் இருந்து சபரிமலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
x
Daily Thanthi 2025-01-13 03:26:54.0
t-max-icont-min-icon

நாளை மகரவிளக்கு பூஜை: பந்தளத்தில் இருந்து சபரிமலை புறப்பட்ட திருவாபரண ஊர்வலம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பாண்டின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அப்போது அய்யப்பனுக்கு பாரம்பரிய வழக்கப்படி திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

இந்த திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவை நேற்று பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்பட்டது. முன்னதாக சாஸ்தா கோவிலில் மதியம் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் திருவாபரணங்கள் 3 சந்தன பேழைகளில் எடுக்கப்பட்டு பந்தளம் ராஜ குடும்ப மூத்த பிரதிநிதி திருக்கோட்ட நாள் ராஜ ராஜ வர்மா தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டது.


Next Story