ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-01-2025
x
Daily Thanthi 2025-01-11 08:33:53.0
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சமீபத்தில் மரணம் அடைந்ததும், அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் அக்கட்சியில் கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ளார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வாழ்த்து பெற்றார்.


Next Story