சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)
x
Daily Thanthi 2024-12-11 02:46:46.0
t-max-icont-min-icon

சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும் - தனியார் வானிலை ஆய்வாளர்


தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலை தளத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும்.

நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம்;

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் காவிரி படுகை, கொடைக்கானல், குன்னூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு கொடைக்கானல், குன்னூர் செல்வதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்கலாம்

தென் தமிழகம் - மதுரை - தேனி, தென்காசி விருதுநகர் போன்ற பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும். தூத்துக்குடி நெல்லை, குமரி தென்பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story