தெலுங்கானா சுரங்க விபத்து.. 7 பேரை தேடும் பணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025
Daily Thanthi 16 March 2025 6:36 AM
t-max-icont-min-icon

தெலுங்கானா சுரங்க விபத்து.. 7 பேரை தேடும் பணி தீவிரம்

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் தோமலபென்டா பகுதியருகே கடந்த பிப்ரவரி 22-ம் தேதி சுரங்கப்பாதை கட்டுமான பணி நடைபெற்றபோது சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய 8 தொழிலாளர்களில் கடந்த 9-ம் தேதி ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 7 பேரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 24 மணி நேரமும் பணி நடைபெறுகிறது.

சுரங்கப்பாதைக்குள் குவிந்துள்ள மண் மற்றும் பிற குப்பைகளை விரைவாக அகற்றுவதற்காக, ஹைட்ராலிக் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. அதனுடன் 30 ஹெச்பி திறன் கொண்ட வாக்கம் பம்ப், வாக்கம் டேங்க் மெஷின் போன்ற உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.


Next Story