உக்ரைனுக்கு மேம்பட்ட ராக்கெட் அமைப்புகளை வழங்கினால்.... மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை...!


உக்ரைனுக்கு  மேம்பட்ட ராக்கெட் அமைப்புகளை வழங்கினால்.... மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை...!
x
Daily Thanthi 5 Jun 2022 11:21 PM
t-max-icont-min-icon

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் மேம்பட்ட ராக்கெட் அமைப்புகளை வழங்கினால், உக்ரைனில் புதிய இலக்குகளை குறி வைத்து தாக்குவோம் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார்.

இப்படிப்பட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்குவது, மோதலை முடிந்த வரை இழுத்துச்செல்வதுதான் என்றும் அவர் சாடினார்.

உக்ரைனுக்கு நடுத்தர இலக்கு பன்முக ராக்கெட் அமைப்புகளை வழங்க ஜோ பைடன் நிர்வாகம் தயாராகி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறிய நிலையில், இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

இதற்கிடையே உக்ரைனும், மேற்கத்திய நாடுகளும் ரஷியாவை அவமதிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியது, உக்ரைனுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story