ஐ.நா. விசாரணை  கிழக்கு உக்ரைனில் சிறிதளவு... ... #லைவ் அப்டேட்ஸ்: ரஷிய போரால் உக்ரைனுக்கு ரூ.45 லட்சம் கோடி இழப்பு
Daily Thanthi 2022-06-04 00:06:46.0
t-max-icont-min-icon


ஐ.நா. விசாரணை

கிழக்கு உக்ரைனில் சிறிதளவு உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள இரு நகரங்களில் ஒன்றான லைசிசான்ஸ்க் நகரில் 60 சதவீத உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் ரஷிய படைகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் அரங்கேறி இருப்பது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐ.நா.வின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் 3 மனித உரிமைகள் நிபுணர்களை விசாரணைக்காக அங்கு அனுப்புகிறது. அந்த குழு, லிவிவ், கீவ், கார்கிவ், சுமி ஆகிய நகரங்களுக்கு 7-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சென்று விசாரணை நடத்த உள்ளது என ஐ.நா. ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Next Story