தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல்... ... மதுரை  மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
x
Daily Thanthi 2024-02-27 10:52:34.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கிரிக்கிறது. காசி தமிழ் சங்கமம், செங்கோல் இவற்றின் வழியாக தமிழுக்கு மரியாதை செலுத்தி வருகிறேன். என்னை பொருத்தளவில் தமிழ் கலாசாரமும், தமிழ் மொழியும் மிக சிறப்பானதாக இருக்கிறது. நாடு தான் முதன்மையானது என பாஜக கருதுகிறது.

என் மண்.. என் மக்கள் யாத்திரை தமிழகத்தை ஒரு புதிய பாதையில் எடுத்து செல்கிறது. 1991-ல் நான் ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய போது, கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினேன். தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளை கொண்டது. கன்னியாகுமரி மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டு என்னுடைய யாத்திரையை தொடங்கினேன்.- பிரதமர் மோடி பேச்சு




Next Story