காசா ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்த 35 ஆயிரம் பேர்  ... ... 10ம் நாளாக தொடரும் போர்: ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்
x
Daily Thanthi 2023-10-15 22:54:38.0
t-max-icont-min-icon

காசா ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்த 35 ஆயிரம் பேர்

காசாவின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷீபா ஆஸ்பத்திரி மிகவும் மோசமான சூழலை எதிர்கொண்டு வருவதாக அங்குள்ள டாக்டர்கள் கூறுகின்றனர். நோயாளிகளை தவிர்த்து பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 35 ஆயிரம் பேர் பாதுகாப்பு தேடி அந்த ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தங்கள் வீடுகள் அழிக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதால், அந்த ஆஸ்பத்திரிதான் தங்களுக்குப் பாதுகாப்பான இடம் என்று நம்பி, அங்கு மக்கள் அடைக்கலம் புகுந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அங்கு பணியாற்றி வரும் டாக்டர் ஒருவர் கூறுகையில், “தோல் கருகி, உறுப்புகளை இழந்து வலியால் துடிக்கிற நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க போதிய வலிநிவாரணி மருந்துகள் இருப்பில் கிடையாது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளார்கள் தொடர்ந்து பணியில் உள்ளார்கள். காயமுற்றவர்கள் தங்கள் முறைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது கவலைக்குரிய ஒன்று” என கூறினார்.


Next Story